ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றதோடு வசூல் செய்ததா அமரன்?.. முதல் நாள் வசூல்..!!

கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடித்துள்ள திரைப்படம் தான் அமரன். இந்த திரைப்படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்கியுள்ளார். இவர் இதற்கு முன்பு கௌதம் கார்த்திக் நடித்த ரங்கூன் என்ற திரைப்படத்தை இயக்கி இருந்தார். இது தவிர பிக் பாஸ் நிகழ்ச்சியின் டைரக்டராகவும் ராஜ்குமார் பெரியசாமி பணியாற்றியுள்ளார். அப்போது கமல்ஹாசன் உடன் கிடைத்த நட்புக்கு பரிசாக கிடைத்தது தான் அமரன் திரைப்பட வாய்ப்பு. இந்த திரைப்படத்தில் நடிகர் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சாய்பல்லவி நடித்துள்ளார்.

இவர்கள் இருவரும் ஜோடியாக நடிக்கும் முதல் திரைப்படம் இதுதான். இவர் திரைப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசை அமைத்துள்ள நிலையில் ரசிகர்களின் நீண்ட எதிர்பார்ப்புக்கு மத்தியில் நேற்று தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இந்த திரைப்படம் வெளியானது. இதில் ராணுவ வீரர் கதாபாத்திரத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ளார். தீவிரவாதிகள் உடனான மோதலில் வீர மரணம் அடைந்த தமிழ்நாட்டை சேர்ந்த இராணுவ மேஜரான முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையை மையமாக வைத்ததால் அமரன் திரைப்படம் உருவாகி உள்ளது.

இந்த திரைப்படத்திற்காக மிகவும் ரிஸ்க் எடுத்து சிவகார்த்திகேயன் நடித்துள்ளார். நீண்ட எதிர்பார்ப்புக்கு மத்தியில் நேற்று வெளியான இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த நிலையில் அமரன் படத்தின் முதல் நாள் வசூல் விவரம் வெளியாகியுள்ளது. அதன்படி சிவகார்த்திகேயனின் அமரன் திரைப்படம் முதல் நாளில் இந்தியாவில் ரூ.21 கோடி வசூலித்த நிலையில் தமிழ்நாட்டிலிருந்து மட்டும் ரூ.15 கோடி வசூலித்துள்ளது.

Read Previous

தீபாவளியன்று சோகம்..!! பட்டாசு தீப்பொறி பட்டு 4 குடிசை வீடுகள் எரிந்து நாசம்..!!

Read Next

பாத்திரம் அடி பிடித்து விட்டதா கவலை வேண்டாம்..!! இந்த டிப்ஸை பின்பற்றி எளிதாக கறையை நீக்குங்க..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular