இந்திய ரிசர்வ் வங்கி, கிரேடு ‘சி, டி, இ’ பிரிவுகளில் 93 முழுநேர ஒப்பந்தப் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தகுதியானவர்கள் வரும் ஜனவரி 6, 2026-க்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். பொறியியல் துறையில் தொடர்புடைய பிரிவில் பி.இ., பி.டெக்., பி.எஸ்சி., எம்.எஸ்சி., எம்.ஏ., சி.ஏ முடித்து பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். வயது வரம்பு 27 முதல் 45 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எழுத்துத்தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் நேர்முகத்தேர்வு மூலம் தேர்வு நடைபெறும்.



