திருநெல்வேலியில் தனியார் நிறுவனத்தில் ரூ.5 லட்சம் முதலீடு செய்தால், மாதந்தோறும் லட்சக்கணக்கில் வருமானம் கிடைக்கும் என ஆசைவார்த்தை கூறி பொதுமக்களிடம் பணம் வசூலித்ததாக புகார் எழுந்துள்ளது.
முதலீடு செய்தவர்களுக்கு வாக்குறுதி அளித்தபடி வருமானம் வழங்கப்படவில்லை என்றும், முதலீட்டுத் தொகையையும் திருப்பி அளிக்காமல் மோசடி செய்ததாகவும் பாதிக்கப்பட்டவர்கள் போலீசில் புகார் அளித்தனர்.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி, சண்முகலட்சுமி (23), பூரணசெல்வி (30) ஆகிய இருவரை கைது செய்தனர். இந்த சம்பவத்தில் மேலும் பலர் பாதிக்கப்பட்டுள்ளனரா? மோசடி செய்யப்பட்ட மொத்த தொகை எவ்வளவு? என்பது உள்ளிட்ட கோணங்களில் போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.




