சென்னையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. அதில், வரும் அக்டோபர் 31 தேதி அனைத்து மக்களாலும் தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட இருக்கிறது. ஆனால் மிகக் கடுமையான விலைவாசி உயர்வின் காரணமாக உழைக்கும் மக்களுக்கு இது தித்திக்கும் தீபாவளியாக அமைவதற்கு மாறாக திண்டாடும் தீபாவளியாக மாறிவிடும் சூழல் இருக்கிறது.
தீபாவளி பண்டிகையை மகிழ்ச்சியோடு கொண்டாட முடியாத அளவிற்கு நாடு முழுவதும் அனைத்து உணவுப் பொருட்களின் விலையும் கடுமையாக உயர்ந்துள்ளது. எனவே ஏழை எளிய மக்களின் நலன் கருதி தமிழ்நாடு அரசு ரேஷன் கடைகளில் அத்தியாவசிய உணவுப் பொருட்களை தீபாவளி தொகுப்பாக வழங்கிட வேண்டும் என்று தமிழ்நாடு அரசை வலியுறுத்துவதாக அந்த தீர்மானத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.




