இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் ஆனது பல வாகனங்களுக்கு ஒரே பாஸ்ட்டேக் பயன்படுத்துவதை தடுக்கவும், நாடு முழுவதும் சுங்க கட்டண வசூலை முறைப்படுத்தவும் ஒரு வாகனம், ஒரு பாஸ்ட்டேக்’ கொள்கையை அறிமுகப்படுத்தியது. இதில் தானாக பாம் செலுத்துவது மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. ஒரு குறிப்பிட்ட வரம்புக்கு கீழே வரும்போது இருப்புத் தொகை தானாகவே நிரப்பப்பட்டு வந்தது. பணம் குறைவாக உள்ள பட்சத்தில் 24 மணி நேரத்திற்கு முன்னதாகவே அறிவிப்பு வழங்கப்படும்.
தற்போது புதிய விதிகளின்படி, இந்த 24 மணி நேர அறிவிப்பு நீக்கப்பட்டுள்ளது. இப்போது, பாஸ்டேக் கணக்கில் இருப்பு குறிப்பிட்ட வரம்பை விடக் குறைந்தவுடன், முன் அறிவிப்பு இல்லாமல் பணம் தானாக கழிக்கப்படும். பாஸ்டேக் மற்றும் நேஷனல் காமன் மொபிலிட்டி கார்டு (என்சிஎம்சி) உள்ளிட்ட பல்வேறு சேவைகளில் தானாக பணம் செலுத்துவதை ஒழுங்குபடுத்தும் இ-மாண்டேட் அமைப்பின் ஒரு பகுதியாக இந்த மாற்றம் செயல்படுத்தப்பட்டது. இந்த அப்டேட் தானியங்கி ரீசார்ஜ்களின் வசதியை மேம்படுத்தும் அதே வேளையில், பயனர்கள் தங்கள் கணக்கு நிலுவைகள் குறித்து அதிக விழிப்புடன் இருக்க வேண்டும் என்பதையும் இது குறிக்கிறது.




