தமிழ்நாடு அரசு அறிமுகப்படுத்திய தாயுமானவர் திட்டத்தின் கீழ், முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் போன்றவர்கள் இனி ரேஷன் கார்டு பொருட்களை வீடு தேடி பெறலாம். இந்தத் திட்டம், ஒவ்வொரு மாதமும் 2-ஆம் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் செயல்படுத்தப்படுகிறது.
முதலில் கள ஆய்வின் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்ட பயனாளிகள் இந்த திட்டத்தில் சேர்க்கப்பட்டிருந்தனர். இப்போது, புதிய பயனாளிகளும் ரேஷன் கார்டு வீடு தேடி வர விண்ணப்பிக்க வாய்ப்பு உள்ளது.
எங்கு விண்ணப்பிக்கலாம்?
தமிழ்நாடு அரசு வெளியிட்ட தகவலின் படி, மாதந்தோறும் நடைபெறும் ரேஷன் கார்டு குறைதீர் முகாமில் (Public Distribution System Camps) கலந்து கொண்டு, இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம்.
முகாமில் செய்யக்கூடியவை:
மின்னணு குடும்ப அட்டையில் முகவரி மாற்றம்
பெயர் திருத்தம், உறுப்பினர் பெயர் சேர்த்தல் / நீக்கல்
அலைபேசி எண் புதுப்பித்தல்
புதிய குடும்ப அட்டை அல்லது நகல் அட்டை கோருதல்
குடும்பத் தலைவரின் புகைப்படத்தை பதிவேற்றம் செய்து திருத்தம் செய்தல்
சிறப்பு வசதிகள்:
நியாய விலைக்கடைக்கு வர முடியாத மூத்த குடிமக்கள் மற்றும் நோயாளிகளுக்கு அங்கீகார சான்று வழங்கப்படும்.
பொது விநியோகக் கடைகளின் சேவை குறைபாடுகள் மற்றும் தனியார் சந்தையில் விற்கப்படும் பொருட்களில் உள்ள பிரச்சனைகள் தொடர்பாக, மக்கள் மனு அளித்தால் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும்.
தமிழ்நாடு அரசு, மக்கள் இந்த சிறப்பு முகாம்களை பயன்படுத்தி ரேஷன் பொருட்கள் வீடு தேடி பெறுவதற்கான விண்ணப்பங்களைச் செய்யுமாறு கேட்டுக் கொண்டுள்ளது.




