சென்னை மதுரவாயலைச் சேர்ந்த செல்வராஜ் என்பவருக்கு சொந்தமான நிறுவனத்தில், சப்தகிரி (32) என்பவர் லாரி ஓட்டுநராக வேலை பார்த்து வருகிறார். நேற்று முன்தினம் (ஜூலை 22) இரவு 9 மணியளவில் முட்டைகளை மொத்தமாக கொள்முதல் செய்வதற்காக, சப்தகிரியிடம் ரூ.10 லட்சத்தை கொடுத்துள்ளனர். அதனை, ஓட்டுநர் இருக்கையின் அடியில் வைத்துள்ளார். மறுநாள் அதிகாலை 4 மணியளவில், விக்கிரவாண்டி அருகே ஓட்டுநர் மீது மிளகாய் பொடி தூவி அந்த பணத்தை ஒரு கும்பல் கொள்ளையடித்துள்ளது. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.




