தெலங்கானா: வரதட்சணை கொடுமையைத் தாங்க முடியாமல், ஒரு கர்ப்பிணிப் பெண் தனது 2 குழந்தைகள் கண் முன்னே தற்கொலை செய்து கொண்டார். நாகராணி (25) என்ற பெண், 5 ஆண்டுகளுக்கு முன்பு இஸ்லாவத் சந்தோஷை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளன. இந்நிலையில், அவர் கர்ப்பிணியாக உள்ள நிலையில், கணவரின் வரதட்சணை கொடுமை தாங்க முடியாமல் தற்கொலை செய்துகொண்டார். தாய் இறந்ததை அறியாத குழந்தைகளைப் பார்த்த உறவினர்கள் கதறி அழுதனர்.




