வலிப்பு ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும்?
1. வலிப்பு ஏற்பட்டால் இரும்புப் பொருளைக் கொடுக்க வேண்டுமா?
2. ஒருவரை மயக்கமடையச் செய்ய கட்டையால் அடிப்பது
ஒருவருக்கு வலிப்பு ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டுமென யாரிடமாவது கேட்டால், ‘கையில் சாவி அல்லது இரும்பைக் கொடுங்கள்’ என்பதே உடனடி பதிலாக இருக்கும். பல திரைப்படங்களில் நாம் அந்தக் காட்சியை பார்த்திருப்போம்.
வலிப்பு ஏற்பட்டால் இரும்புப் பொருளைக் கொடுக்க வேண்டுமா?
ஒருவருக்கு வலிப்பு ஏற்பட்டால் இரும்புப் பொருள் அல்லது சாவிக்கொத்தை கொடுப்பது மிகவும் தவறான செயல் வலிப்பு ஏற்படும் சமயத்தில் பாதிப்புக்குள்ளாகும் நபர்கள், கை, கால்களை வேகமாக அசைப்பார்கள் எனும்போது, இரும்பு அல்லது சாவிக்கொத்து கொடுத்தால், அதைக் கொண்டு அவர்கள் தங்களைக் காயப்படுத்திக்கொள்ள வாய்ப்புள்ளது.”அந்த நபரை உடனடியாக தரையில், ஒருக்களித்து படுக்க வைக்க வேண்டும் என்றும், அருகில் ஏதேனும் கூரான பொருட்கள் இல்லாதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும் வலிப்பு என்பதே 30 நொடிகள் முதல் 1 நிமிடம் வரை நீடிக்கக்கூடியதுதான். அதிகபட்சமாக 2 நிமிடங்களுக்கு மேல் செல்ல வாய்ப்பில்லை. எனவேதான் இரும்புப் பொருள் அல்லது சாவியைக் கொடுத்த சில நொடிகளில் வலிப்பு நின்று விடுகிறது என பலர் நம்புகிறார்கள். திரைப்படங்களும் அதை ஊக்குவிக்கின்றன. அதுவொரு மூடநம்பிக்கை. அதன் பின்னால் எந்த அறிவியலும் இல்லை”
ஒருவரை மயக்கமடையச் செய்ய கட்டையால் அடிப்பது
கட்டையால் பின்னந்தலையில் அடித்து அல்லது குளோரோஃபார்ம் பயன்படுத்தி ஒரு கதாபாத்திரத்தை மயக்கமடையச் செய்வார்கள். சில நிமிடங்கள் கழித்து, அந்தக் கதாபாத்திரம் மயக்கம் தெளிந்து ‘நான் எங்கே இருக்கிறேன்?’ எனக் கேட்கும் – உள்ளத்தை அள்ளித்தா, உனக்காக எல்லாம் உனக்காக, ஃபிரண்டஸ் என பல தமிழ் திரைப்படங்களில் இந்தக் காட்சியை காணமுடியும்.
“ஒரு துணியில் குளோரோஃபார்ம் கொட்டி, அதை ஒருவரின் முகத்தில் அல்லது மூக்கில் வைத்து 4-5 நொடிகள் அமுக்கினால், அவர்கள் மயக்கமடைந்துவிடுவார்கள் என்பது திரைப்படங்களில் மட்டுமே சாத்தியம். நிஜத்தில் ஒருவர் மயக்கமடைய 3 முதல் 5 நிமிடங்கள் ஆகும்
ஆனால் அந்த முறையில் ஒருவரை மயக்கமடையச் செய்ய அதிக அளவிலான குளோரோஃபார்ம் தேவைப்படும், அது ஒருவரை கோமா நிலைக்கு கொண்டுசெல்லக்கூடும் 3 நிமிடங்களுக்கு மேல் ஒருவரது முகத்தில் துணியை வைத்து அழுத்தினால் நிச்சயமாக மூச்சுத்திணறல் ஏற்பட்டு அவர் உயிரிழப்பார் அல்லது மூர்ச்சையடைவார். அதேபோல ஒருவரை கட்டையால் அடித்தால், அவர் மயங்கிவிட்டு, மீண்டும் சகஜமாக எழுந்து பேச வாய்ப்பில்லை.
கட்டையால் அடித்தவுடன் வெளிக்காயம் மட்டுமல்லாது தலைக்குள் ரத்தக்கசிவு ஏற்படவும் வாய்ப்பு அதிகம். உயிருக்கே ஆபத்தான சூழல் கூட ஏற்படலாம். நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணரின் ஆலோசனையும், சில சமயங்களில் அறுவை சிகிச்சையும் கூட தேவைப்படும்
இந்த பாதிப்புகள் அடிப்பட்டவருக்கு எனும்போது, அடித்தவர் (நடைமுறை வாழ்க்கையில்) சட்ட ரீதியான சிக்கல்களை சந்திக்கக்கூடும் என்பதை நாம் தனியாகக் குறிப்பிடத் தேவையில்லை.




