வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்.!
வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் என்பார்கள். இந்த பழமொழி எப்படி வந்தது தெரியுமா?
பாண்டவர்களும் கௌரவர்களும் அண்ணன், தம்பி பிள்ளைகள். இவர்கள் பலவித போர் பயிற்சிகளை பெற்று வந்தனர்.
ஒரு நாள் இவர்கள் விளையாடிய பந்து ஒரு கிணற்றுக்குள் விழுந்து விட்டது. பந்தை எடுக்க வழி தெரியாமல் அவர்கள் விழித்தனர். அப்போது துரோணர் என்ற வில்வித்தை குரு அவ்வழியே வந்தார் .அவர் அழுக்கடைந்த எளிமையான ஆடையை அணிந்திருந்தார் இதை பார்த்த கௌரவர்கள் அவரை அலட்சியம் செய்து ஒதுங்கி நின்றனர்.
பாண்டவர்களில் ஒருவனான அர்ஜுனன் அவரை வணங்கினான். அவனது பணிவு கண்ட துரோணர் , அவனுக்கு வில்வித்தை கற்றுக் கொடுக்க முடிவெடுத்தார். அப்பகுதியில் நின்ற புற்களை பறித்து வர ஆணையிட்டார்.
அவனும் புல்லைப் பறித்து வந்தான். அவற்றை ஒவ்வொன்றாக பந்தை நோக்கி குறி வைத்து வீசும் படி துரோணர் சொன்னார்.
அர்ஜுனனும் அவ்வாறே செய்ய புற்கள் ஒவ்வொன்றும் சங்கிலி போல கோர்த்து நின்றன.
அதில் முதல் புல், பந்தை தொட்டு நின்றது.
அப்படியே புல் கயிறை மேலே இழுக்கும்படி துரோணர் சொன்னார் .உள்ளிருந்த பந்து, புல் கயிறில் ஒட்டியபடி மேலே வந்தது.
வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் என்பதை புரிந்து கொண்ட பாண்டவர்களும், கௌரவர்களும் அன்று முதல் அவரிடம் வில்வித்தை கற்க ஆரம்பித்தனர்.
ஒருவரது உடை மற்றும் எளிமையான தோற்றத்தை கண்டு அவரது திறமையை எடை போட்டு விடக்கூடாது என்பது இந்த நிகழ்வு நமக்கு உணர்த்தும் பாடம்.




