வாக்காளர் பட்டியலில் இறந்தவர்கள் இடம் மாறியவர்கள் பெயர்களை நீக்க கோரி வழக்கு : தேர்தல் ஆணையம் பதிலளிக்க உத்தரவு..!!

ஊரகம் உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல் தயாரிப்பின் போது இறந்தவர்கள் மற்றும் இடம் மாறிய அவர்களின் பெயர்களை நீக்க கோரி வலியுறுத்தல்…

ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல் தயாரிப்பின் போது இறந்தவர்கள் மற்றும் இடம் மாறியவர்களின் பெயர்களை நீக்கக்கோரி தொடரப்பட்ட வழக்கில் இந்திய தேர்தல் ஆணையம் மாநில தேர்தல் ஆணையம் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது, சென்னை உயர்நீதிமன்றத்தில் மதுரை வீரன் என்பவர் தாக்கல் செய்திருந்த மனுவில் தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு 2019 தேர்தல் நடைபெற்றது, அந்த தேர்தலில் வெற்றி பெற்றவர்களின் பதவிக்காலம் அடுத்த மாதம் டிசம்பருடன் முடிவடைகிறது, இதனால் ஊரக உள்ளாட்சித் தேர்தல் பணிகளை மேற்கொள்ள மாநில தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்து வருகிறது, இதற்காக வாக்காளர் பட்டியல் தயாரிப்பு பணிகளுக்காக இந்திய தேர்தல் ஆணையத்திடம் பட்டியல் கோரி உள்ளது, ஆனால் எம்பி எம்எல்ஏக்களை தேர்வு செய்வதற்காக இந்திய தேர்தல் ஆணையம் தயாரித்த வாக்காளர் பட்டியிலேயே பல்வேறு குளறுபடிகள் இருந்தன, எனவே கள்ள ஓட்டுகளை தவிர்க்கும் வகையில் ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல் தயாரிப்பின் போது இறந்தவர்களை மற்றும் இடம் மாற்றி சென்றவர்களின் பெயர்களை நீக்க மாநில தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தால் இந்த வழக்கு தலைமை நீதிபதி கே ஆர் ஸ்ரீராம் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் இந்த வழக்கில் இந்திய தேர்தல் ஆணையம் மற்றும் மாநில தேர்தல் ஆணையம் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை வரும் நவம்பர் 28ஆம் தேதிக்கு தள்ளி வைத்தனர்…!!

Read Previous

23 மாவட்டங்களில் இன்று இரவு 10 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் அறிவிப்பு..!!

Read Next

சர்க்கரை நோயாளிகள் : 32 வருடங்களில் நான்கு மடங்காக எகிறி அடித்த நீரிழிவு நோய் வெளிவந்த புதிய ரிப்போர்ட்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular