சென்னை செங்கல்பட்டு உள்ளிட்ட 23 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது…
தென் தமிழகம் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழ் அடுக்கு சுழற்சி காரணமாக இன்று 15.11.2024 தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது, இந்த நிலையில் தமிழகத்தில் 23 மாவட்டங்களில் இரவு 10 மணி வரை லேசான முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர் அரியலூர் பெரம்பலூர் மயிலாடுதுறை காரைக்கால், நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், ராமநாதபுரம், சிவகங்கை, தூத்துக்குடி, தென்காசி, ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது, தமிழக கடலோர பகுதிகள் மற்றும் மன்னார் வளைகுடா ஆந்திரா கடற்கரை பகுதியையொட்டி காற்றழுத்த தாழ்வு நிலவியுள்ள நிலையில் தமிழகத்தில் ஒரு சில இடங்களில் பரவலாக மழை பெய்யக்கூடும் என இந்திய ஆன்லைன் மையம் அறிவித்துள்ளது..!!




