வாசலில் திருஷ்டிக்காக
தொங்கவிடப்படும் எலுமிச்சை
மற்றும் மிளகாய் பண்டைய காலத்தில் உபயோகிக்கப்பட்ட முதலுதவிப் பெட்டி.
பண்டைய காலத்தில் கிராமங்களில் இரவு நேரத்தில் பாம்பு நடமாட்டம் அதிகமாக இருக்கும். பாம்பு கடித்து இறப்பது அல்லது மூலிகை வைத்தியம் செய்து பிழைக்க வைப்பது போன்ற சம்பவங்கள் அடிக்கடி நடக்கக் கூடியவை.
எனவே இரவு நேரத்தில் பாம்பு கடித்தால் முதலுதவி செய்ய ஒரு கயிற்றில், எலுமிச்சை, மிளகாய் மற்றும் முள் அல்லது சின்ன கத்தி கட்டப்பட்டு அனைவரின் வீட்டிலும் கண் பார்வைக்கு எளிதாக வாசற்படியின் மேல் கட்டப்பட்டு இருக்கும்.
சரி இது எப்படி முதலுதவிக்கு உதவும்?
இரவில் திடீரென பாம்பு கடித்தால், உடனடியாக
கயிறு – அந்த கயிற்றை வைத்து இறுக்கமான கை அல்லது கால் பகுதியில் கட்டுவர். நச்சு உடம்பில் மற்ற பகுதிக்கு பரவாமல் இருக்க, இது பல படங்களில் பார்த்து இருப்போம்.
முள் அல்லது கத்தி – இதன் மூலம் பாம்பு கடித்த இடத்தில் சிறு காயத்தை ஏற்படுத்தி நச்சினை வெளியேற்றச் செய்வர்.
எலுமிச்சை மற்றும் மிளகாய் – இது கடைசியாக அவரை வாயில் போட்டு நாக்கில் இந்த இரண்டு சுவையும் உணர முடிகிறதா என பரிசோதிப்பர்.
அவரால் காரம் மற்றும் புளிப்பு சுவையை உணர முடியவில்லை என்றால் நச்சு தலைக்கு ஏறிவிட்டது. அவரைக் காப்பற்ற முடியாது இறக்கப் போகிறார் என்று பொருள்.
அவசர நேரத்தில் தேட நேரம் ஆகும் என்பதால், நம் கண்பார்வைக்கு எளிதாக இருக்க வேண்டும் என்பதால் வீட்டின் முன்புறம் கட்டுவர்.
இதில் வேறு எந்த அறிவியல் காரணமும் கிடையாது.
இன்றைய காலத்தில் வாகனங்களில் மற்றும் வீட்டில் இது எதுக்கு கட்டுகிறார்கள் என்பது
பெரிய கேள்வி குறியாகும்.




