வாட்ஸ்அப் மூலம் தடையில்லா பண பரிவர்த்தனை..!! மெட்டா நிறுவனம் வெளியிட்ட புதிய அப்டேட்..!!

சோசியல் மீடியாவில் ஒன்றான வாட்ஸ்ஆப் தற்போது   வாழ்க்கையின்  முக்கிய அங்கமாக மாறியுள்ளது. மேலும், உங்கள் குடும்பம் மற்றும் நண்பர்களுடன் இணைந்திருக்க  இது உதவுகிறது. இந்நிலையில் வணிக தொடர்புக்கு ஏற்ற வகையில் புதிய மாற்றம் ஒன்றை கொண்டு  வர உள்ளதாக வாட்ஸ்அப் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதாவது, இந்தியாவில் சில்லறை விற்பனைத் துறையின்  பரிவர்த்தனைகளை கட்டுப்படுத்தும் அமைப்பான நேஷனல் பேமென்ட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (NPCI), இப்போது வாட்ஸ் அப் பயன்படுத்தும் அனைத்து பயனர்களுக்கும் “வாட்ஸ்அப் பே” மூலம் டிஜிட்டல் பேமெண்ட் வசதியை வழங்க அனுமதித்துள்ளது. இந்த வசதியை உபயோகிக்க “பைல் அட்டச்மெண்ட்” ஐகானைக் கிளிக் செய்து, “பேமெண்ட்” ஆப்ஷனை தேர்ந்தெடுக்க வேண்டும். அதன் பிறகு பணம் செலுத்துதல் அல்லது கோரிக்கை என்ற விருப்பத்தை கிளிக் செய்வதன் மூலம் உங்கள் பண பரிவர்த்தனையை மேற்கொள்ளலாம். மேலும், முன்னதாக 10 கோடி பயனர்கள் மட்டும் பயன்படுத்திக் கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்ட இந்த வசதி நீக்கப்பட்டு இப்போது அனைத்து பயனர்களும் உபயோகிக்கும் வடிவில் மாற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Read Previous

கட்டாயம் இதை யூஸ் பண்ணிக்கோங்க..!! 1 லட்சம் முதலீட்டுக்கு இவ்ளோ லாபமா?..

Read Next

தாறுமாறான நன்மையை அளிக்கும் இஞ்சி..!! நீரிழிவு நோயாளிகளுக்கு நிகழும் அதிசயம்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular