வாய்ப்புற்றுநோய் ஏற்பட காரணிகள் மற்றும் தடுக்கும் முறைகள்..!!

 

புற்றுநோயானது உயிரணுக்களின் கட்டுப்பாடற்ற வளர்ச்சியாக வரையறுக்கப்படுகிறது, புற்றுநோயானது மேலும் மேலும் பரவி சுற்றியுள்ள திசுக்களுக்கு சேதத்தை ஏற்படுத்துகிறது.

வாய் புற்றுநோய் ஒரு வளர்ச்சியாகவோ அல்லது வாயில் புண்ணாகவோ ஏற்பட வாய்ப்புள்ளது . இது உதடுகள் , நாக்கு, கன்னங்கள், வாயின் தளம், கடினமான மற்றும் மென்மையான அண்ணம், சைனஸ்கள் மற்றும் குரல்வளை (தொண்டை) ஆகியவற்றை பெரும்பாலும் தாக்குகிறது. ஆரம்பத்தில் கண்டறியப்பட்டு சிகிச்சையளிக்கப் படாவிட்டால் உயிருக்கும் ஆபத்தை ஏற்படுத்தவல்லது .

#எப்போது மருத்துவரை அணுக வேண்டும் ?

1. குணமாகாத நாள்பட்ட வாய்ப்புண்.

3 வாரங்கள் அல்லது அதற்கு மேற்பட்ட ஆறாத வாய்ப்புண் உள்ளவர்கள் நிச்சயம் மருத்துவ ஆலோசனை பெறுதல் அவசியமாகும் .

2.வெள்ளை / சிவப்பு படலங்கள்..

3.த்ரஷ் என்னும் பூஞ்சை தொற்று..

4.நீண்ட காலமாக உணவை விழுங்குதலில் ஏற்படும் அசவுகரியம்..

5.கழுத்து பகுதியில் ஏற்படும் அதிக வீக்கம். இது நிணநீர் முடிச்சுகளில் ஏற்படும் வீக்கமாகவும் இருக்கலாம் .

6.நாக்கு / இதர பாகங்களில் உணர்ச்சியின்மை..

7. தாடைகளில் உண்டாகும் நாள்பட்ட வீக்கம்..

8. அதிகளவு எதிர்பாராத எடைகுறைவு

#ஆபத்து காரணிகள் :

புகையிலை / சுருட்டு / பீடி ஆகியவற்றை உபயோகித்தல்,
அதிக மது பழக்கம்,
அதிகளவு வெயில் மற்றும் UV கதிர்களுக்கு ஆளாகுதல்,
பாப்பிலோமா வைரஸ்,
நோய் எதிர்ப்புத்திறன் இல்லாமை
“முன்கூட்டிய நோய் கண்டறிதல் நோய் குணப்படுத்துதலில் முக்கிய பங்காற்றுகிறது ”

நோயை சீக்கிரம் கண்டுபிடித்தலின் மூலம் 80 முதல் 90 விழுக்காடு நோயை குணப்படுத்த முடியும் .

முன்னெச்சரிக்கை மற்றும் தடுப்பு நடவடிக்கை முறைகள்:

புகை பிடித்தல் , புகையிலை உட்கொள்ளுதல், மது போன்றவற்றை தவிர்க்க வேண்டும். சத்தான அனைத்து ஊட்டச்சத்து நிறைந்த உணவை உட்கொள்ள வேண்டும். வயது வரம்பு பாராமல் வருடம் இரண்டு முறையாவது மருத்துவரை அணுகி சுயபரிசோதனை செய்துகொள்ள வேண்டும். வாய் அல்லது உடலின் வேறு பாகங்களில் ஏதேனும் வீக்கம், தொடர்ச்சியான மாதக் கணக்கான வலி , உணர்ச்சியின்மை , நிறமாற்றம் போன்றவை தென்படுமாயின் உடனடியாக மருத்துவ ஆலோசனை பெறுதல் வேண்டும்.

Read Previous

ஆண்களின் விந்தணு வீரியத்தன்மையை அதிகரிக்கும் தக்காளி சூப்..!!

Read Next

இஞ்சி டீ குடிப்பதனால் ஏற்படும் 7 அபாயகரமான தீமைகள்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular