வாய் துர்நாற்றமா..?? அப்போ கண்டிப்பா மறக்காம இத மட்டும் பண்ணுங்க போதும்..!!
பலருக்கும் இருக்கும் ஒரு பிரச்சனை இந்த வாய் துர்நாற்றம். இந்த வாய் துர்நாற்றம் காரணமாக ஒரு சிலருக்கு பேசுவதில் சிரமம் ஏற்படுகிறது. இந்த வாய் துர்நாற்றத்தை போக்க பல மருத்துவ ரீதியாக மருந்துகள் மற்றும் மவுத்வாஸ்கள் இருந்தாலும் இயற்கையான முறையில் இந்த வாய் துர்நாற்றத்தை எப்படி போக்குவது என்பதை பற்றி தற்போது பார்க்கலாம்.
வாய் துர்நாற்றத்தை போக்க எலுமிச்சை சாறுடன் நீர் கலந்து அதில் சிறிதளவு உப்பு சேர்த்து கொப்பளிக்க வாய் துர்நாற்றம் நீங்கும். குடல் சார்ந்த பிரச்சனைகளால் தான் பெரும்பாலான வாய் துர்நாற்றம் ஏற்படுகிறது. இதை சரி செய்ய காலையில் எழுந்தவுடன் டீ காபிக்கு பதில் நாலு டம்ளர் தண்ணீரை வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும்.
இதனால் வயிறு சுத்தமாவதோடு அல்சர் நீங்கி வாய் துர்நாற்றம் நீங்கும். காலை மாலை இரண்டு நேரம் பல் துலக்கலாம். பற்களை நன்றாக துலக்காவிட்டாலும் வாய் துர்நாற்றம் ஏற்படும்.




