Oplus_131072
வாழைப்பழ அல்வா செய்வது எப்படி….
தேவையானவை:
நன்கு பழுத்த வாழைப்பழம் – 4,
சர்க்கரை – அரை கப்,
நெய் – 2 டேபிள்ஸ்பூன்,
முந்திரித் துண்டுகள் – 2 டீஸ்பூன்.
செய்முறை:
அடி கனமான பாத்திரத்தில் நெய் விட்டு, முந்திரியை வறுத்தெடுக்கவும். அதே பாத்திரத்தில், நறுக்கிய வாழைப்பழத் துண்டுகளை சேர்த்து மிதமான தீயில் நன்கு வதக்கவும். நிறம் மாறியதும், சர்க்கரை சேர்த்து அடிபிடிக்காமல் நன்கு கிளறி, முந்திரி சேர்க்கவும். விருப்பப்பட்டால், மற்ற பழங்களையும் சேர்க்கலாம்.
விருந்தாளிகளுக்கு உடனடியாக செய்து கொடுக்கக்கூடிய சுவையான டிஷ் இது!




