வாழை குடிநீர்..!! இதன் மருத்துவ பயன் பற்றி உங்களுக்கு தெரியுமா..??

#வாழை_குடிநீர்.

“மருத்துவ பயன்.

வாழை குடிநீர் என்பது வாழை மரத்தின் கிழங்கு தண்டு மற்றும் பகுதியிலிருந்து பெறப்படும் நீராகும்.

வாழை குடிநீரின் சிறப்புகள் மற்றும் மருத்துவக் குணங்களைப் பற்றி விளக்கமாக காண்போம்.

வாழை மரத்தை வெட்டிய பிறகு அதன் கிழங்கு மற்றும் தண்டுகளில் இருந்து ஊறி வரும் நீரே உயிர் காக்கும் மருந்துப் பொருளாக விளங்குகிறது.

அந்த நீரை ஒரு பாத்திரத்தில் சேகரித்து அடுப்பில் வைத்து இளஞ்சூடாக சுடவைத்து சுத்தமான வெள்ளைத் துணியில் வடிகட்டி சுத்தம் செய்து பத்திரப்படுத்தி வருடக் கணக்கில் கெடாமல் பாதுகாப்புடன் நாம் தினமும் பருகினால் உடலில் வெப்பம் சார்ந்து வரும் அனைத்து ஆரோக்கிய குறைபாடுகளில் இருந்தும் குணம் பெறலாம்.

சிறுநீரக கற்களை கரைக்க மட்டுமே பலரும் பயன்படுத்துகின்றனர். ஆனால் இந்நீர் நமது உயிர் ஆற்றலை அதிகப்படுத்தும் தன்மை கொண்டது என்பது சிறப்பு.

#வாழைக்கிழங்கு மற்றும் #தண்டு நீரின் நன்மைகள்:

1. சிறுநீரகத்திலிருந்து கற்களை நீக்க உதவுகிறது.
2. சிறுநீரகங்களின் செயல்பாடுகளை ஒழுங்குபடுத்துகிறது.
3. உடல் வெப்பநிலையை சமப்படுத்த உதவுகிறது.
4. இரத்தத்தை சுத்திகரிக்க உதவுகிறது.
5. நமது நோயெதிர்ப்பு சக்தியை வலுவாக அதிகரிக்க உதவுகிறது.
6. கை,கால் குடைச்சல் மற்றும் வீக்கம், முழங்கால் மூட்டு வலியைக் குறைக்க உதவுகிறது.
7. சிறுநீர் மற்றும் வயிறு தொடர்பான பிரச்சினைகளை குறைக்கிறது.
8. வாயு பிரச்சினைகளை குறைக்க உதவுகிறது.
9. இது நம் வயிற்றில் இருந்து கழிவுகளை அகற்ற உதவுகிறது.
10. இது கண் பார்வையை மேம்படுத்துகிறது.
11. வயிற்று புண்ணை குணப்படுத்த உதவுகிறது.
12. இது இரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு நோயை ஒழுங்குபடுத்துகிறது.
13. உடல் வெப்பம் தொடர்பான அனைத்து சுகாதார பிரச்சினைகளையும் நீக்க இது உதவுகிறது.
14. ஆண்மை விருத்தியாகும்.
சர்வ ரோக நிவாரணியாக உள்ள இந்த வாழை கிழங்கு மற்றும் தண்டு குடிநீரை

#பயன்படுத்தும்_முறை*

50 ml வாழைகிழங்கு குடிநீரை தினசரி காலை வெறும் வயிற்றில் உமிழ்நீருடன் உறவாடி ருசித்து அருந்த வேண்டும்.

Read Previous

யாருக்காவது உதவட்டும்….படித்துவிட்டு ஷேர் செய்யவும்..!!

Read Next

தோலில் உள்ள தேமல் படி படியாக மறைய சில பயனுள்ள இயற்கை வழிமுறைகள்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular