வாழ்க்கையைப் பற்றி நாம் நன்றாக தெரிந்து கொள்ள வேண்டுமானால் நாம் இந்த மூன்று இடங்களுக்கு சென்றால் மட்டும் போதும்..!!!
நம் முன்னோர்களின் காலகட்டத்தில் இருந்தே கூறுவார்கள் உனக்கு இந்த இடத்திற்கு போனால் தான் தெரியும் எங்களின் அருமை உனக்கு இந்த இடத்திற்கு போனால் தான் தெரியும் வாழ்க்கையை பற்றி என்று நம் வீட்டில் உள்ள பெரியவர்கள் பலரும் சொல்லி கேள்விப்பட்டிருப்போம். ஆனால் அவர்கள் சொன்ன இடங்கள் வேறு. அதாவது அம்மா சொல்வார்கள் நீ உன் மாமியார் வீட்டிற்கு சென்றால்தான் என்னுடைய அருமை தெரியும் என்று. இந்நிலையில் வாழ்க்கையைப் பற்றி நாம் நன்றாக தெரிந்து கொள்ள வேண்டுமானால் எந்த மூன்று இடங்களுக்கு செல்ல வேண்டும் என்பதை பற்றி தற்போது பார்க்கலாம்.
மருத்துவமனை
சிறைச்சாலை
சுடுகாடு
வாழ்க்கையைப் பற்றி நாம் நன்றாக தெரிந்து கொள்ள மருத்துவமனை சென்றாலே போதும் ஏனெனில் ஆரோக்கியத்தை விட மற்ற எதுவுமே பெரிதில்லை என்பதை மருத்துவமனை நமக்கு நன்றாக புரிய வைக்கும். இவ்வளவு பணம் இருந்து என்ன பண்றதுங்க உடம்புல வியாதி இப்படி இருக்கே அப்படின்னு பலரும் சொல்லி புலம்புவார்கள்.
வாழ்க்கையை நன்றாக தெரிந்துகொள்ள சிறைச்சாலை சென்றால் போதும். ஏனெனில் சுதந்திரத்தை விட விலைமதிப்பானது வேற ஏதுமில்லை என்பதை சிறைச்சாலை தான் நமக்கு புரிய வைக்கும்.
உயிரோடு வாழ்வதை விட பெரியது எதுவுமில்லை என்பது சுடுகாடு தான் நமக்கு புரிய வைக்கும்.




