கல்வி, மின்சாரம், மருத்துவம் போன்ற அடிப்படை தேவைகளை தவெக செய்துகொடுக்கும் என அக்கட்சியின் தலைவர் விஜய் வாக்குறுதி அளித்துள்ளார். திருச்சி மரக்கடை பகுதியில் நடைபெற்ற தேர்தல் பரப்புரையில் பேசிய விஜய், “பெண்கள் பாதுகாப்பில், சட்ட பிரச்னைகளில் No Compromise. நாங்கள் அதை செய்வோம் இதை செய்வோம் என வாக்குறுதி கொடுக்க மாட்டோம். தவெக ஆட்சி அமைந்தால் நடைமுறைக்கு எது சாத்தியமோ அதை மட்டுமே செயல்படுத்துவோம்” என்று கூறியுள்ளார்.




