கொழுக்கட்டை சுவையாக இருக்க டிப்ஸ்..!
கொழுக்கட்டை பூரணத்துக்கு வேர்க்கடலை போலவே எள்ளை வறுத்து வெல்லம் சேர்த்து பொடி செய்து வைக்கலாம். தேங்காயை துருவி சர்க்கரை ஏலக்காய் சேர்த்தும் பூரணம் வைக்கலாம்.
கொழுக்கட்டை செய்யும் போது முந்திரி, சர்க்கரை, கடலைப்பருப்பு, வெல்லம், எள்ளு ஆகியவற்றை கொண்டு செய்தால் சுவையாக இருக்கும்.
திராட்சை, பேரீச்சம்பழத்தை வெந்நீரில் ஊற வைத்து அரைத்து எடுத்து டிரை ஃப்ரூட்ஸ் கொழுக்கட்டை செய்யலாம். ருசியாக கலர்ஃபுலாக இருக்கும்.
ராகி மாவை வேக வைத்து அதில் வெல்லம் சேர்த்து கொழுக்கட்டை செய்தால் ருசியாக இருக்கும். உடலுக்கு மிகவும் நல்லது.
பலாச்சுளை கொழுக்கட்டை செய்யும் போது விருப்பமான வடிவத்தில் கொழுக்கட்டை செய்யலாம். பால் சேர்ப்பதால் கொழுக்கட்டை சுவையாகவும் மற்றும் வெண்மையாகவும் இருக்கும். வேறு வேறு பூரணம் கொண்டும் செய்யலாம்.
கொழுக்கட்டை உருட்டியதும் காற்றில் காய விடாமல் பார்த்துக்கொள்ளுங்கள் இல்லையென்றால் உருண்டைகள் வெடித்து விடும்.
பூரண கொழுக்கட்டை செய்யும் போது வெல்லம் அளவாக சேர்க்கலாம். அதிகமாகி விட்டால் பூரணம் கெட்டியாக இருக்காது.
அரிசி மாவினால் தான் கொழுக்கட்டை செய்ய வேண்டும் என்பதில்லை மைதா மாவையும் தண்ணீரில் கரைத்து வேகவைத்து செய்யலாம். இன்னும் அதிகமான சுவையாக இருக்கும்.
உப்பு கொழுக்கட்டை செய்யும் போது பட்டாணி, முட்டைக்கோஸ் இவற்றை வைத்தும் செய்தால் சுவையாகவும், மிருதுவாக இருக்கும்.
மாவு பிசையும் போது வெல்லம் தண்ணீர் போதுமான அளவில் இல்லை என்றால் சாதாரண தண்ணீர் சேர்த்தும் செய்யலாம். மேல் மாவுக்கு வெல்லம் சேர்க்காமல் வெறும் உப்பு மட்டும் போட்டு பிசைந்து கொழுக்கட்டை செய்யலாம்.




