நேற்று செப்டம்பர் 7 உலக முழுவதும் விநாயகர் சதுர்த்தி கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது, அப்படி இருக்கும் பட்சத்தில் விநாயகர் சிலையை கரைக்க கூடாத நேரங்கள்..
விநாயகர் சிலையை கரைப்பதற்கு மூன்றாம் நாள் ஐந்தாம் நாள் ஏழாம் நாள் என ஒற்றைப்படை நாட்களிலேயே கரைக்க வேண்டும் மேலும் இரட்டைப்படை நாட்களில் விநாயகர் சிலையை கரைப்பது தவறு அப்படி செய்வது ஆன்மீக குற்றமாகும், செப்டம்பர் ஆறாம் தேதி சிலையை வாங்குபவர்கள் செப்டம்பர் 7ஆம் தேதி சிலையை கரைக்க வேண்டும், செப்டம்பர் 8 தேதி எமகண்டம் 12 மணி முதல் மதியம் 1:30 வரை ராகு காலம் மாலை 4:30 முதல் 6 மணி வரை இவற்றில் விநாயகர் சிலைகளை கரைக்கக் கூடாது, செப்டம்பர் ஒன்பதாம் தேதி விநாயகர் சிலையை கரைக்க இருப்பவர்கள் காலை 7:30 மணி முதல் 9 மணி வரை தவிர்த்து இதற்கு மேல் ஏற்படும் நல்ல நேரங்களில் விநாயகர் சிலையை கரைப்பது நல்லது, மேலும் வீட்டில் வைத்து வழிபட்ட விநாயகர் சிலையை கரைப்பதற்கு ஏற்ற நேரம் சாயங்காலம் ஆறு மணி ஆகும்..!!



