வீட்டில் அடிக்கடி சண்டை சச்சரவு வருகிறதா..?? அப்ப கண்டிப்பா இந்த பதிவை படிங்க..!!
வீட்டில் அடிக்கடி தேவையில்லாத வாக்குவாதம் சண்டை சச்சரவு போன்றவை வந்து மன நிம்மதி இல்லாமல் இருக்கிறீர்களா.. உங்களுக்குத்தான் இந்த பதிவு கண்டிப்பா படிங்க.
செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமை அன்று மாலை நேரத்தில் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அதில் 5 நட்சத்திர சோம்பு என்று சொல்லப்படுவது போட்டு நன்கு கொதிக்க விடவும். பின்பு அந்த தண்ணீரை வீட்டு காலில் சற்று நேரம் வைத்து விடவும். அதிலிருந்து வரும் ஆவி வீடு முழுக்க பரவட்டும் சற்று ஆரிய பிறகு எடுத்து கீழே ஊற்றி விடவும். வாரத்தில் வேறு இரண்டு நாட்கள் ஒரு சிறிய தட்டில் இரண்டு கற்பூரம் வைத்து அதில் ஒரு பிரிஞ்சு இலை மற்றும் இரண்டு லவங்கம் 2 துண்டு பச்சை கற்பூரம் சேர்த்து எரிய விட்டு வீட்டில் உள்ள அனைத்து மூளைகளுக்கும் காட்டவும். இப்படி தொடர்ந்து ஒரு மாதம் செய்து வர வீட்டில் உள்ள சண்டை சச்சரவுகள் படிப்படியாக குறைவதை நீங்களே பார்ப்பீர்கள்.




