சேலம் மாவட்டம் தலைவாசல் காலபைரவர் கோயிலில் இன்று (மே 20) அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழிபாடு செய்தார். கோயிலில் வெள்ளிக்கவசம் வழங்கி வழிபாடு செய்த பழனிசாமிக்கு அர்ச்சகர்கள் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செய்து சுவாமி தரிசனத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. எதிர்வரும் தேர்தலில் அதிமுக வெற்றி அடையவும், தமிழக மக்களின் நலன் வேண்டியும் எடப்பாடி சுவாமி தரிசனம் செய்ததாக கட்சியின் நிர்வாகிகள் தகவல் தெரிவித்தனர்.




