நேற்று முன்தினம் பெரியார் சிலைக்கு மரியாதை செலுத்திய தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் அவர்கள் மற்ற தமிழ் தலைவர்களுக்கும் மரியாதை செலுத்த வேண்டும் என சீமான் வலியுறுத்தியுள்ளார், மேலும் 2026 இல் சிறப்பான ஆட்சி விஜய் அமைக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்..
பெரியார் சிலைக்கு மரியாதை செலுத்தியதை போல் தமிழ் தலைவர்களுக்கும் விஜய் மரியாதை செலுத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளார் நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான், சாதி ஒழிப்பு தீண்டாமைக்கு எதிரான பெரியார் மட்டுமே போராடினார் என்பதை ஏற்க முடியாது எனவும் தங்களது முன்னோர்கள் பல்லாங்குழி ஆடிக் கொண்டிருக்கிறார்கள் எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் பெரியாரை தமிழ் தேசியத்தின் எதிரியாக பார்க்கவில்லை என்றும் கூறியுள்ளார், இனிவரும் காலங்களில் பெரியாரைப் போல் மற்ற தமிழ் தலைவர்களுக்கும் மரியாதை செலுத்த வேண்டும் என விஜய் அவர்களை வலியுறுத்தி கேட்டுக்கொண்டார், விஜயின் ஆட்சி சிறப்பாக அமைய வேண்டும் என்றும் நாம் தமிழர் கட்சி சீமான் வாழ்த்தியுள்ளார்..!!




