ஹர்திக் பாண்டியாவை தங்கள் அணிக்கு கொண்டு வர சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் ஆர்வம் காட்டி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஆனால், ஹர்திக் பாண்டியா தொடர்பாக எந்த அணியுடனும் இதுவரை பேச்சுவார்த்தை நடைபெறவில்லை என மும்பை இந்தியன்ஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அதேபோல், யஷஸ்வி ஜெய்ஸ்வால் மும்பை இந்தியன்ஸ் அணிக்கும், ஹர்திக் பாண்டியா ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கும் செல்ல உள்ளதாக வெளியாகும் தகவல்களும் தற்போது உறுதி செய்யப்படாத ஊகங்களாகவே உள்ளன.




