ரூ.6 கோடி கிடைக்கும் என்ற மூடநம்பிக்கை.. 17 வயது சிறுவன் கொடூரக் கொலை!

 

 

மத்தியப் பிரதேசத்தில் வெளிநாட்டில் மனித உறுப்பை விற்பனை செய்தால் ரூ.6 கோடி கிடைக்கும் என்ற மூடநம்பிக்கையை நம்பி, 17 வயது சிறுவனை ஏமாற்றி அழைத்துச் சென்று கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

சிறுவனை கொலை செய்த கும்பல், அவரது உடலில் இருந்து உறுப்பை அகற்றியதாக கூறப்படுகிறது. ஆனால், அதனை வாங்க யாரும் முன்வராததால் சிறுவனின் உடலை அங்கேயே விட்டுச் சென்றதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், இதில் தொடர்புடையதாக கூறப்படும் கும்பலை தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த கொடூர சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Read Previous

ஹர்திக் பாண்டியாவை குறிவைக்கும் CSK, KKR? வெளியான பரபரப்பு தகவல்!

Read Next

சாலையோர வியாபாரிகளுக்கு ரூ.50,000 வரை கடன்! மத்திய அரசின் முக்கிய திட்டம்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular