நடிகர் சரத்குமாரின் மகள் என்ற அடையாளத்துடன் தமிழ் சினிமாவில் அடியெடுத்து வைத்து தனக்கென ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியவர் நடிகை வரலட்சுமி சரத்குமார்.
இந்த நிலையில் தமிழ், தெலுங்கில் நடித்து வந்த நடிகை வரலட்சுமி சரத்குமார் தற்போது ஹாலிவுட்டில் அடியெடுத்து வைத்துள்ளார். இயக்குநர் சந்திரன் ருட்னம் இயக்கத்தில் பிரிட்டிஷ் நடிகர் ஜெர்மி ஐயன்ஸ் நடிக்கும் ‘RIZANA-A Caged Bird’ படத்தில் வரலட்சுமி நடிக்க உள்ளார். உண்மைக் கதையை மையமாக வைத்து இப்படம் எடுக்கப்பட உள்ளது. அகாடமி விருது வென்ற ஜெர்மி ஐயன்ஸுடன் இணைந்து பணியாற்றுவது மகிழ்ச்சி என வரலட்சுமி தெரிவித்துள்ளார்.




