தமிழ் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளுக்கு குறைவான நிதியும், சமஸ்கிருதத்திற்கு அதிக நிதியும் ஒன்றிய அரசு ஒதுக்கியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து இன்று (ஜூன் 25) சென்னையில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய விசிக தலைவர் திருமாவளவன், “ஆங்கிலத்தை தூக்கி எறிய வேண்டும் என பேசுபவர்கள் பிற மொழிகளை மதிப்பதில்லை. இவர்கள் யாருக்காக வேலை செய்கிறார்கள் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்” என்றார்.




