+2 முடித்திருந்தால் போதும்..!! மத்திய அரசில் கை நிறைய சம்பளத்துடன் அருமையான வேலை..!!

மத்திய அரசு துறைகளில் ஸ்டெனோகிராபர் (Group C மற்றும் Group D) பதவிகளை நிரப்புவதற்காக மத்திய பணியாளர் தேர்வாணையம் (SSC) அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதற்கான ஆன்லைன் விண்ணப்பம் தற்போது இணையதளத்தில் நடைபெற்று வருகிறது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் ஜூன் 26, 2025க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

🔹 விளம்பர எண்: F.No. E/16/2025-C-2

🔹 பணியிடங்கள்: மொத்தம் 261

தகுதி: பிளஸ் 2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

🔹 சுருக்கெழுத்து திறன்:

– Group D – நிமிடத்திற்கு 80 வார்த்தைகள் (ஹிந்தி/ஆங்கிலம்)

– Group C – நிமிடத்திற்கு 100 வார்த்தைகள்

– தட்டச்சு திறன்: நிமிடத்திற்கு 50 வார்த்தைகள்

🔹 வயது வரம்பு (01.08.2025 அடிப்படையில்):

– Group C – 18 முதல் 30 வயது

– Group D – 18 முதல் 27 வயது

(அரசுத் துறை வழக்கப்படி ஓபிசி, எஸ்சி, எஸ்டி, மாற்றுத் திறனாளிகள், முன்னாள் ராணுவ வீரர்களுக்கு சலுகைகள் உள்ளன)

🔹 தேர்வு முறை:

– ஆன்லைன் எழுத்துத் தேர்வு

– சுருக்கெழுத்து மற்றும் தட்டச்சு திறனை மதிப்பீடு செய்யும் தேர்வுகள்

🔹 தேர்வு நாட்கள்: ஆகஸ்ட் 6 முதல் ஆகஸ்ட் 11, 2025

🔹 தேர்வு மையங்கள்: சென்னை, கோவை, மதுரை, திருச்சி, சேலம், திருநெல்வேலி, வேலூர், புதுச்சேரி

🔹 விண்ணப்பக் கட்டணம்: ₹100 (பெண்கள், எஸ்சி, எஸ்டி, மாற்றுத் திறனாளிகள், முன்னாள் ராணுவத்தினருக்கு கட்டண விலக்கு)

🔹 விண்ணப்பிக்கும் முறை:

அதிகாரப்பூர்வ இணையதளம் – www.ssc.gov.in

ஆன்லைன் விண்ணப்பிக்க கடைசி நாள்: 26.06.2025

📌 தேர்வுக்கான முழுமையான பாடத்திட்டம் மற்றும் அறிவிப்பை இணையதளத்தில் பார்க்கலாம்.

📩 தேர்வின் தேதி, இடம் தொடர்பான தகவல்கள் தகுதியானவர்களுக்கு மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கப்படும்.

Read Previous

கண் கலங்க வைத்த பதிவு..!! நீங்களும் படித்துப் பாருங்க அந்த வலி புரியும்..!! படித்ததில் வலித்தது..!!

Read Next

10-ம் வகுப்பு முடித்திருந்தால் போதும்..!! மாதம் ரூ.50,000 சம்பளத்தில் மத்திய அரசு வேலை..!! உடனே அப்ளை பண்ணுங்க..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular