22 இந்திய மாலுமிகளுடன் 2 கப்பல்கள் கடத்தல்.. கடற்பகுதிகளில் பரபரப்பு!

 

 

ஏமன் மற்றும் சோமாலிய கடற்பகுதிகளில் அடுத்தடுத்து 2 வணிகக் கப்பல்கள் கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்டுள்ளன. இதில் மொத்தம் 22 இந்திய மாலுமிகள் சிக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

ஏமன் அருகே ‘எம்.டி. சிபு 1’ என்ற கச்சா எண்ணெய் கப்பலை ஆயுதம் ஏந்திய 6 கடற்கொள்ளையர்கள் கைப்பற்றியதாகவும், அதில் 16 இந்தியர்கள் உட்பட 20 பேர் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

 

மேலும், சோமாலியாவின் புன்ட்லேண்ட் பகுதியில் ‘M/V LUTUF’ என்ற சரக்குக் கப்பலை 8 கடற்கொள்ளையர்கள் சிறைபிடித்ததாகவும், அதில் 6 இந்தியர்கள் உட்பட 10 பேர் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

இந்திய மற்றும் சர்வதேச கடற்படைகள் இணைந்து மாலுமிகளை பாதுகாப்பாக மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றன.

Read Previous

சட்டப்பேரவையில் பரபரப்பு.. பிரதமர் குறித்த கருத்துகளை நீக்கலாம்: ஆதவ் அர்ஜுனா!

Read Next

இளைஞர்கள் மீது தாக்குதல் புகார்.. காவல் நிலையம் சென்ற ராகுல் காந்தி!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular