தொகுதி மறுவரையறை விவகாரம்.. தமிழகத்திற்கு தனிச்சட்டம் வேண்டும்: ஆதவ் அர்ஜுனா!

 

 

தொகுதி மறுவரையறை விவகாரத்தில் தமிழகத்தின் உரிமைகளை பாதுகாக்கும் வகையில், மத்திய அரசு தமிழகத்திற்கு சிறப்பு சட்டம் கொண்டு வர வேண்டும் என்பதே தங்களின் நிலைப்பாடு என அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தெரிவித்துள்ளார்.

 

மேலும், தொகுதி மறுவரையறை மசோதாவை திமுக எம்.பி.க்கள் நாடாளுமன்றத்தில் எதிர்த்தால், திமுகவின் எதிர்ப்பால்தான் அந்த மசோதா சட்டமாகவில்லை என்பதை ஏற்றுக்கொள்வதாகவும் அவர் கூறினார்.

 

மாநில உரிமைகளுக்காக கடந்த காலங்களில் அனைத்து தரப்பினரும் ஒன்றிணைந்ததைப் போல, தற்போதும் தமிழக நலனுக்காக ஒன்றிணைய வேண்டும் என ஆதவ் அர்ஜுனா வலியுறுத்தியுள்ளார்.

Read Previous

மனைவியின் உறவால் மனமுடைந்த தொழிலாளி.. சோகத்தில் முடிந்த வாழ்க்கை!

Read Next

காவல் நிலையத்தில் இளைஞர் விஷம் குடித்ததாக பரபரப்பு.. 2 போலீசார் சஸ்பெண்ட்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular