அரசுப் பள்ளிகளில் 6 முதல் 12-ம் வகுப்பு வரை படித்து, தற்போது பட்டப்படிப்பு, டிப்ளமோ, ஐடிஐ உள்ளிட்ட உயர்கல்வி படிப்புகளில் சேர்ந்துள்ள மாணவிகள், புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் மாதம் ரூ.1,000 உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்.
நடப்புக் கல்வியாண்டில் உயர்கல்வியில் சேர்ந்துள்ள மாணவிகள், தாங்கள் பயிலும் கல்வி நிறுவனங்கள் மூலமாகவோ அல்லது தமிழ்நாடு அரசின் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையின் அதிகாரப்பூர்வ இணையதளம் மூலமாகவோ விண்ணப்பிக்கலாம்.
மேலும் விவரங்கள் மற்றும் ஆன்லைன் விண்ணப்பத்திற்கு:
tnsocialwelfare.tn.gov.in




