சிவில் சர்வீஸ் தேர்வுக்குத் தயாராகும் தமிழக மாணவர்களுக்கு உதவும் வகையில், தமிழக அரசு புதிய ஊக்கத்தொகை திட்டத்தை அறிவித்துள்ளது.
இத்திட்டத்திற்கான தகுதித் தேர்வு வரும் செப்டம்பர் 6 அன்று நடைபெற உள்ளது. இதில் தேர்ச்சி பெறும் 1,000 மாணவ-மாணவிகளுக்கு, முதல்நிலை (Prelims) தேர்வுக்கான பயிற்சிக்காக 10 மாதங்கள் மாதம் ரூ.7,500 வீதம் நிதியுதவி வழங்கப்படும்.
திறமையான மாணவர்களை அடையாளம் கண்டு, அவர்களின் சிவில் சர்வீஸ் கனவை நனவாக்க ஊக்குவிப்பதே இந்தத் திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.




