3,769 கோயில்களுக்கு புதிய அறங்காவலர்கள் நியமனம்: விண்ணப்பிக்க அழைப்பு..!!

தமிழக இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களுக்கு புதிய பரம்பரை முறைசாரா அறங்காவலர்களை நியமிக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
நாகப்பட்டினம், திருச்சி, திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் உள்ள 3,769 கோயில்களுக்கு அறங்காவலர்கள் நியமிக்கப்பட உள்ளனர். இதில் சட்டப்பிரிவு 46(ii)-ன் கீழ் 39, 46(i)-ன் கீழ் 267, 49(1)-ன் கீழ் 3,463 கோயில்கள் அடங்கும். இதற்குத் தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விண்ணப்பப் படிவங்கள், தகுதிகள் மற்றும் கோயில்களின் விவரங்களை [www. hrce .tn.go v.in](http:// www.h rce .tn .gov .in) இணையதளத்தில் பெறலாம். விண்ணப்பங்களை ஆன்லைனிலோ அல்லது பதிவிறக்கம் செய்து உரிய ஆவணங்களுடன் சம்பந்தப்பட்ட இணை ஆணையர் அல்லது உதவி ஆணையர் அலுவலகத்திலோ சமர்ப்பிக்கலாம். விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் 18.09.2026 மாலை 5.45 மணி.
இது அரசு வேலைவாய்ப்புக்கான அறிவிப்பு அல்ல என அறநிலையத்துறை தெரிவித்துள்ளது. கோயில்களின் நிர்வாகம், வழிபாட்டு முறைகள் மற்றும் ஆன்மீகப் பணிகளைச் சிறப்பாக மேற்கொள்வதற்காக அறங்காவலர்கள் நியமிக்கப்படுகின்றனர். தகுதியும் ஆன்மீக ஈடுபாடும் கொண்ட பக்தர்கள் உரிய காலத்திற்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

Read Previous

தமிழக அரசியலில் தவெக ஆட்சியில் இடதுசாரிகளுடன் விரிசலா?

Read Next

“ஆதாரங்களை ஓபன் செய்ய வைத்துவிடாதீர்கள்!” – பேரவையில் முதலமைச்சர் விஜய் எச்சரிக்கை..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular