தமிழகத்தில் கடந்த சில நாட்களாக சுங்க வரி கட்டணம் அதிகரித்துகின்ற நிலையில் தமிழகத்தில் ஆம்னி ஓட்டுநர்கள் தங்களது கட்டணத்தை உயர்த்தி உள்ளதாக பயணிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர், மேலும் 3990 ரூபாய் வசூலிக்கப்படுகிறது என்றும் கூறியுள்ளனர்..
தொடர் விடுமுறையையொட்டி இன்றிலிருந்து இரண்டு நாட்களுக்கு சிறப்பு பேருந்துகளை இயக்க தமிழக அரசு போக்குவரத்து கழகம் உத்தரவிட்டுள்ளது, இந்நிலையில் தொடர் விடுமுறையையொட்டி செப்டம்பர் 13 இன்று புறப்படும் ஆம்னி பேருந்துகளின் கட்டணம் உயர்ந்துள்ளதாக பயணிகள் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளனர், அதன்படி சென்னையில் இருந்து மதுரைக்கு செல்ல 3 ஆயிரத்து 800 ரூபாயும் சென்னையில் இருந்து நாகர்கோவிலுக்கு செல்ல 3990 ரூபாயும் வசூலிக்கப்படுவதாக குற்றம் சாட்டியுள்ளனர், மேலும் பயணிகள் விடுமுறை தினத்தில் அதிகளவு பணம் வசூலித்து கொண்டிருப்பதாக குற்றம் சாட்டி திகைத்துள்ளனர் மேலும் தமிழக அரசு இதனை கண்டிக்க வேண்டும் என்றும் மக்களின் நலன் கருதி விடுமுறை காலத்தில் குறைவான வசூலிப்பில் பேருந்துகள் இயக்கப்பட வேண்டும் என்றும் கூறியுள்ளனர்…!!




