5 நாட்களுக்கு தமிழகத்தில் கன மழை எச்சரிக்கை..!!

தமிழகத்தில் சில நாட்களாக வடகிழக்கு பருவமழை பெய்து வருவதை தொடர்ந்து, தற்சமயம் தமிழகத்தில் மீண்டும் அந்த நாட்களுக்கு பருவமழை தாக்கம் அதிகமாக இருக்கும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது…

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களுக்கு இன்று முதல் ஐந்து நாட்களுக்கு சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் கனமழை எச்சரிக்கை விடுத்துள்ளது, இன்று கோவை மாவட்டம் மலைப்பகுதிகளில், திருப்பூர், நீலகிரி, தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தென்காசி, நெல்லை, குமரி, தூத்துக்குடி, ராமநாதபுரம் ஆகிய 12 மாவட்டங்களில் கன மழை பெய்யக்கூடும் என்றும் நாளை 7 மாவட்டங்களில் கன மழை பெய்யக்கூடும் என்றும் சென்னை மாநில மையம் எச்சரித்துள்ளது, மேலும் தமிழகத்தில் ஒரு சில இடங்களில் பரவலாக மழை பெய்யக்கூடும் என்றும் சில இடங்களில் மேகமூட்டமான நிலையில் காணப்படும் என்றும் சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது..!!

Read Previous

மூலிகை : சிறுநீரக தொற்றை போக்கும் பாதாளமூலி..!!

Read Next

செந்தில் பாலாஜி கோரிக்கை நிராகரிப்பு..!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular