Oplus_131072
ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்திற்கும் முருங்கைக்கீரை இயற்கை மருந்தாக உள்ளது. எனவே இதை வாரம் ஒரு முறை வீட்டில் சமைத்து சாப்பிடுங்கள். முருங்கைக்கீரை வாங்கினால் அதை சுத்தம் செய்து உருவுவதுதான் சிரமமாக உள்ளது என நீங்கள் நினைத்தால் அதற்கும் சூப்பராக யோசனை உள்ளது. அதை செய்து பாருங்கள். ஒரு கட்டு கீரையாவே இருந்தாலும் 5 நிமிடத்தில் உருவலாம்.
முருங்கைக்கீரை இரும்புச் சத்து நிறைந்தது. இதை வாரம் ஒரு முறை பொரியலாகவோ, குழம்பாகவோ செய்து சாப்பிடுவது நல்லது. ஏனெனில் இது இரும்புச்சத்து மட்டுமன்றி , நோய் எதிர்ப்பு சக்தி, கால்சியம் , வைட்டமின் ஏ, வைட்டமின் சி மற்றும் புரதங்கள் நிறைந்துள்ள. இது கண் பார்வைக்கும் நல்லது, எலும்புகளை பலப்படுத்துவதிலும் சிறந்தது.
அதுமட்டுமன்றி அதில் அடங்கியுள்ள நார்ச்சத்து செரிமானத்தை மேம்படுத்துகிறது. இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்துகிறது. இரத்த அழுத்தத்தை சீராக்குவதிலும் சிறந்தது. இப்படி ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்திற்கும் முருங்கைக்கீரை இயற்கை மருந்தாக உள்ளது. எனவே இதை வாரம் ஒரு முறை வீட்டில் சமைத்து சாப்பிடுங்கள். முருங்கைக்கீரை வாங்கினால் அதை சுத்தம் செய்து உருவுவதுதான் சிரமமாக உள்ளது என நீங்கள் நினைத்தால் அதற்கும் சூப்பராக யோசனை உள்ளது. அதை செய்து பாருங்கள். ஒரு கட்டு கீரையாவே இருந்தாலும் 5 நிமிடத்தில் உருவலாம்.
அதாவது நீங்கள் வாங்கி வந்த முருங்கைக்கீரையை ஒரு நியூஸ் பேப்பரில் சுற்றி எடுத்து வையுங்கள். அதை 10 நிமிடம் அல்லது அரை மணி நேரம் கழித்து எடுத்துப் பாருங்கள். இப்போது அதன் காம்புகளை எடுத்து உதறினால் கீரை இலைகள் உதிர்ந்து விழும். பின் காம்பில் ஒரு இலை கூட மிஞ்சாது. இப்படி அனைத்தையும் செய்யுங்கள். பின் அவற்றில் உள்ள சிறு சிறு களைகளை சுத்தம் செய்து கழுவி பின் சமைக்கலாம்.
முருங்கைக்கீரையை உருவ மற்றொரு வழியும் உள்ளது. அதாவது அனைவரின் வீட்டிலும் காய் சீவும் ஸ்டீல் தகடு இருக்கும். அதில் சிறியதாக காய் சீவ, பெரிய அளவில் காய் சீவ என மொத்தம் மேலே கீழே என 4 அடுக்குகளாக பிரிக்கப்பட்டிருக்கும். அதில் ஒரு அடுக்கு ஸ்டார் போன்று துளைகள் இருக்கும்.
அந்த துளைகளுக்கு இடையில் இந்த காம்புகளை ஒவ்வொன்றாக சொறுகி இழுக்க இலைகள் உதிர்ந்து காம்பு மட்டும் தனியே வந்துவிடும். இப்படி ஒவ்வொன்றாக செய்தால் 5 நிமிடம் கூட ஆகாது கீரையை உருவி எடுத்துவிடலாம்.
எனவே அடுத்த முறை கீரை உருவ சிரமப்பட்டு சமைக்காமல் விடாதீர்கள். இப்படி எளிமையான முறையில் செய்ய வேலை சீக்கிரம் முடியும். வேலை பளுவும் இருக்காது.




