வீட்டில் வாரத்துக்கு ஒருமுறையாவது வெண்டைக்காய் இல்லாமல் உணவு இருக்காது. இந்த வெண்டைக்காயில் இருக்கும் நன்மைகள் என்னவென்று உங்களுக்கு தெரியுமா. இதில் இருக்கும் வழவழப்பு தன்மை பல நன்மைகளை உடலுக்கு தருகிறது. இதில் இருக்கும் நார்ச்சத்தினால், நமது ரத்தத்தில் இருக்கும் தேவையற்ற கொழுப்பு மற்றும் பித்தநீரை சரி செய்வதில் வெண்டைக்காய் சிறப்பு வகிக்கிறது. மேலும், உடலுக்கு தீங்கு விளைவிக்கும் கொழுப்புகளை சேராமல் பார்த்து கொள்கிறது.
வெண்டைக்காயில் பல நன்மைகள் இருக்க காரணம் அதில் இருக்கும் கார்போஹைட்ரேட், புரதம், வைட்டமின் ஈ, வைட்டமின் சி, வைட்டமின் ஏ, கால்சியம், இரும்புச்சத்து போன்றவைகளால்தான். இது ஞாபக சக்தியை அதிகரிக்கவும், அறிவு வளர்ச்சியை அதிகரிக்கவும் உதவுகிறது.
ரத்தசோகை, மலச்சிக்கல், புற்றுநோய், வயிற்றுப்புண், பார்வை குறைபாடு என பல நோய்களையும் சரி செய்கிறது. கர்ப்பிணிப்பெண்கள் கட்டாயம் உடலை குளிர்ச்சியாக வைக்க சாப்பிட வேண்டிய இடத்தில் இது உள்ளது. வெண்டைக்காயை ஊறவைத்து அதன் நீரை குடிகப்பதன் மூலம் சுவாச பிரச்சனை குறைகிறது .




