நாம் சமையலுக்கு பயன்படுத்தும் சோம்பில் உள்ள மருத்துவ குணங்கள் பற்றி உங்களுக்கு தெரியுமா..??
தினசரி சமையலுக்கு பயன்படுத்தும் சோம்பில் உள்ள மருத்துவ குணங்கள் பற்றி இந்த பதிவில் நாம் பார்க்கலாம். கொழுப்புச்சத்தை குறைக்கக்கூடியதும் மலச்சிக்கலைப் போக்கும் தன்மை கொண்டதும் ஞாபகசக்தியை அதிகரிக்க வல்லதும் கண்களை பாதிக்கும் ரத்த அழுத்தத்தை குறைக்க கூடியதும் நச்சுக்களை வெளியேற்றக்கூடியது. அத்தியாவசியமான உணவுப் பொருளாக விளங்கிவரும் சோம்பு, சுவையும் மனமும் கொடுக்கக்கூடியது. சோம்புவை பயன்படுத்தி படிக்கும் குழந்தைகளுக்கு ஞாபக சக்தியை அதிகரிக்கும் மருந்து தயாரிக்கலாம். அது எப்படி என்று தற்போது பார்க்கலாம். அரை ஸ்பூன் சோம்பு பொடி சிறிது பனங்கற்கண்டுடன் நீர் விட்டு கொதிக்க வைக்கவும் வடிகட்டி காய்ச்சிய பால் சேர்க்கவும். இதைக் குடித்து வர ஞாபக சக்தி அதிகரிக்கும் .




