களைப்பாக வரும் குழந்தைகளுக்கு இந்த சிற்றுண்டியை கொடுத்து பாருங்கள்..!! அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய செய்முறை..!!

பள்ளி முடிந்து வரும் குழந்தைகள் களைப்பாக இருப்பார்கள். அவர்களுக்கு கடைகளில் வாங்கும் துரித உணவுகள், பதப்படுத்தப்பட்ட உணவுகளை தருவதற்கு பதில் ஊட்டச்சத்தான உருளைக்கிழங்கை வைத்து ஸ்நாக்ஸ் வீட்டிலேயே பத்து நிமிடத்தில் சுலபமாக செய்து கொடுக்கலாம். இந்த உருளைக்கிழங்கு ஸ்நாக்ஸ் எப்படி செய்யலாம் என இந்த பதிவில் காண்போம்.

தேவையானவை:

உருளைக் கிழங்கு – 1,
இட்லி மாவு – 1 கப்,
வர மிளகாய் – 3,
பூண்டு – 4,
சோம்பு – 1/2 ஸ்பூன்,
பெரிய வெங்காயம் – 1 (பொடியாக நறுக்கியது),
அரிசி மாவு – தேவையான அளவு
கொத்தமல்லி இலை – சிறிதளவு (பொடியாக நறுக்கியது)
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – தேவையான அளவு
தண்ணீர் – தேவையான அளவு

செய்முறை:

வரமிளகாயை ஒரு பாத்திரத்தில் தண்ணீர் சேர்த்து ஐந்து நிமிடங்களுக்கு ஊறவைக்கவும். பின் உருளைக்கிழங்கை தோல் நீக்கி நீள வாக்கில் நறுக்கி குக்கரில் ஒரு விசில் வைத்து எடுத்து கொள்ளவும். பின்னர் ஒரு மிக்ஸி ஜாரில் வரமிளகாய் சோம்பு, பூண்டு சேர்த்து நன்றாக அரைத்து எடுத்துக் கொள்ளவும். பின்னர் தோசை மாவு ஒரு பாத்திரத்தில் சேர்த்து அரைத்து வைத்த மசாலா கலவையை சேர்த்து உப்பு, கொத்தமல்லி தழைகள், வெங்காயம் சேர்த்து கலக்கவும். சிறிது அரிசி மாவு சேர்த்து நன்றாக கலந்து கொள்ளுங்கள்.

பின் ஒரு கடாயை அடுப்பில் வைத்து வேக வைத்த உருளை கிழங்கை மாவில் நன்கு முக்கி எண்ணெயில் பொரித்து எடுக்கவும். இந்த உருளை கிழங்கு ஸ்னாக்சை தக்காளி சாஸ் சேர்த்து பரிமாறவும். அவ்வளவுதான், குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடும் உருளைகிழங்கு சிற்றுண்டி தயார்.

Read Previous

சிக்கனை இப்படி செய்து பாருங்கள்..!! அனைவருக்கும் புதிதான ஒரு செய்முறை..!!

Read Next

தேங்காய் சாதத்தை இப்படி செய்து பாருங்கள்..!! அனைவரும் கட்டாயம் பார்க்கவேண்டிய செய்முறை..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular