குட் பேட் அக்லி படத்திலிருந்து ஒரு புதிய அப்டேட்..!! ரசிகர்கள் பெரும் மகிழ்ச்சி..!!

ஆதிக் ரவிச்சந்திரனின் இயக்கத்திலும் அல்டிமேட் ஸ்டார் அஜித்குமாரின் நடிப்பிலும் ஜிவி பிரகாஷின் இசையிலும் கடந்த ஒரு வருடமாக படம் பிடிக்கப்பட்டு வரும் ஏப்ரல் 10ஆம் தேதி திரைக்கு வரவுள்ள திரைப்படம் தான் குட் பேட் அக்லி.

அஜித் குமாரின் கடந்த படங்களான வலிமை துணிவு மற்றும் விடாமுயற்சி மக்களை கவராத காரணத்தினால் இந்த திரைப்படத்திற்கு அவரது ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் இருக்கின்றனர். மேலும் இந்த திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியாகி பல சாதனைகளை படைத்தது குறிப்பிடத்தக்கது.

ஆதி கவிச்சந்திரனின் முந்தைய படமான மார்க் ஆண்டனி வசூல் சாதனையை செய்து மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது இதற்கு முக்கியமான காரணமாகும். பத்தாம் தேதி வெளிவர உள்ள இந்த படத்தின் புக்கிங் எப்போது தொடங்கும் என ரசிகர்கள் ஆவலாக காத்திருந்து வருகின்றனர். இதற்கு விடை தரும் விதமாக நாளை இரவு 8.02 மணி அளவில் புக்கிங் தொடங்கும் என குட் பேட் அக்லியின் படக்கலு தெரிவித்துள்ளது. இதனால் ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியுடன் காத்திருக்கின்றனர்.

Read Previous

ஜெய்ஸ்வால் எடுத்த திடீர் முடிவு..!! கவலையில் மூழ்கி இருக்கும் ரசிகர்கள்..!!

Read Next

அடித்தது ஜாக்பாட்..!! 28 பேருக்கு ரூ.60,000 மாத ஊதியத்துடன் வேலைவாய்ப்பு..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular