மண்பானையில் பொங்கல் சமைப்பது ஏன் தெரியுமா..?? அதற்கான காரணம் என்ன..??
நம் முன்னோர்களின் காலகட்டத்தில் எல்லாம் பொதுவாக மண்பானையில் தான் சமைக்க வேண்டும் என்ற ஒரு பழக்கம் இருந்தது. நம் முன்னோர்களின் காலகட்டத்தில் மண்பானையில் தான் சமைப்பார்கள். ஆனால் இந்த காலகட்டத்தில் தமிழரின் தொண்டு தொட்டு வரும் இந்த வழக்கத்தை மறந்து பலரும் குக்கர் போன்ற பல வகையான பாத்திரங்களில் சமைக்க ஆரம்பித்து விட்டார்கள் பலருக்கு மண்பானையில் எப்படி சமைக்க வேண்டும் என்று கூட தெரியாது. இந்நிலையில் மண்பானையில் பொங்கல் சமைப்பது ஏன் என்பதன் காரணம் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம். பொதுவாகவே கிராமத்திலும் சரி, நகரத்திலும் சரி பொங்கல் தினத்தன்று மண்பானையில் பொங்கலை சமைக்க வேண்டும் என்று விரும்புவார்கள். இன்றளவும் கிராமங்களில் மண்பானையில் பொங்கல் வைக்கும் முறை உள்ளது ஆனால் நகரத்தில் குக்கரில் சமைத்து கொண்டாடி வருகிறோம். மண்பானையில் தான் பொங்கலை சமைக்க வேண்டும் அவ்வாறு செய்வதால் மண்பானையில் நுண் துளைகளின் வழியாக நீராவியும் காற்றும் உணவின் மீது சீராகவும் மெதுவாகவும் பரவும் இதனால் என்ன பயன் கிடைக்கும் என்றால் சுத்தம் செய்யப்படாத அரிசி காய்கறிகளாக இருந்தாலும் மண்பானையில் சமைக்கும் போது கிருமிகள் அழிந்துவிடும் அடுப்பை விட்டு இறக்கினாலும் சூடு ஆறாமல் அதன் தன்மை கெடாமல் பாதுகாக்கும் உணவின் சத்துக்கள் அனைத்தும் பாதுகாக்கப்பட்ட எளிதாக செரிமானமாகும் உடலுக்கு தரக்கூடிய அனைத்து பலத்தையும் மண்பானை பொங்கல் சேர்த்துவிடும் பொங்கல் தினம் என்பது இயற்கையை வணங்கும் முறையாகும். மண்பானை என்பது இயற்கை தந்த வரம் அதற்கு மனிதன் உருவம் கொடுக்கிறான்.




