நாம் சாப்பிடும் போது சில விதிமுறைகளை பின்பற்றுவது முக்கியம். அப்படி நம் முன்னோர்கள் காலம் காலமாக நம்மிடம் சொல்லி வருவதுதான் சாப்பிடும் போது யாரிடமும் பேசக்கூடாது என்று. சாப்பிடும் போது பேசுவதால் மூச்சுக்குழல் மற்றும் உணவுக் குழல் வாழ்வுகள் திறந்து மூடும். அப்போது நாம் சாப்பிடும் உணவு பாதை மாறி மூச்சுக்குழாய்க்கு செல்ல வாய்ப்பு அதிகமாக இருக்கிறது.
தனித்தனியாக இருக்கும் வாழ்வுகள் ஒரே நேரத்தில் திறந்து மூடும் பொழுது நாம் சாப்பிடும் சாப்பாடு மாறி செல்வதற்கு வாய்ப்புள்ளது. இதனால் நமக்கு மூச்சுத் திணறல் ஏற்படவும் வாய்ப்பு நிறைய இருக்கிறது. அப்படி நாம் சாப்பிடுகின்ற பொழுது பேசியதால் மூச்சுத் திணறல் ஏற்பட்டால் அடுத்த 30 வினாடிக்குள் நமது மூளைக்கு ஆக்சிஜன் செல்வதை தடைபடுத்தி மயக்கத்தை உண்டாக்கும். இதனால் மூச்சுத் திணறல் ஏற்பட்ட நபர் மயங்கும் நிலைக்கு கூட செல்ல வாய்ப்பு இருக்கிறது.
அப்படி நடந்தால் அவருக்கு முதலுதவி கொடுக்க வேண்டும். இல்லையெனில் அவருக்கு மரணம் கூட ஏற்படலாம். நாம் சாப்பிடும் போது நன்றாக மென்று பொறுமையாக சாப்பிட வேண்டும். அப்படி சாப்பிடுவதன் மூலம் தொண்டையில் நாம் உண்ணும் உணவு அடைக்காமல் சென்று விடும். அதேபோல கொஞ்சம் கொஞ்சமாக உணவுகளை சாப்பிட வேண்டும். ஒரே நேரத்தில் அதிகமாக சாப்பிடக்கூடாது.




