தின்பண்டம் என்றாலே நம் அனைவருக்கும் மிகவும் பிடிக்கும். ஆனால் அதில் பல ஆரோக்கியமாக இருக்காது. நமது குழந்தைகளுக்கு ஆரோக்கியமற்ற பொருட்களை கொடுப்பதில் நாம் மிகவும் பயப்படுவோம். ஆனால் இனி இதை உங்கள் குழந்தைகளுக்கு கொடுத்தால் சுவையும் அதிகமாக இருக்கும் ஆரோக்கியமும் அதிகமாக இருக்கும். வாழைப்பூவை வைத்து பஜ்ஜி எப்படி செய்வது என்று இந்த பதிவில் காண்போம்.
தேவையான பொருட்கள் :
வாழைப்பூ – ஒரு கிண்ணம் (பூவின் நரம்பை நீக்கிவிட்டு எடுத்துக்கொள்ள வேண்டும்)
கடலை மாவு – இரண்டு கிண்ணம் அரிசி மாவு – எட்டு தேக்கரண்டி மிளகாய்த்தூள் – இரண்டு தேக்கரண்டி உப்பு – தேவையான அளவு
அரிசி மாவு – 5 டீஸ்பூன்
மஞ்சள் தூள், பெருங்காயம் – தலா 2 சிட்டிகை
சோளமாவு – 2 தேக்கரண்டி
எண்ணெய் – தேவையான அளவு
செய்முறை :
ஒரு பாத்திரத்தை எடுத்துக்கொண்டு அதில் கடலை மாவு மஞ்சள் தூள் அரிசி மாவு பெருங்காயத்தூள், மிளகாய் தூள் சோள மாவு மற்றும் உப்பு சேர்த்து பஜ்ஜி மாவு பதத்திற்கு கரைத்துக் கொள்ள வேண்டும். பின் கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் மிதமான தீயில் அடுப்பை வைத்து வாழைப்பூவை ஒவ்வொன்றாக எடுத்து பஜ்ஜி மாவில் முக்கி எண்ணெயில் போட்டு பொரித்தெடுக்கவும். அவ்வளவுதான் சுவையான மற்றும் சத்தான வாழைப்பூ பஜ்ஜி தயார்.




