கொய்யாப்பழம் என்பது சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் பழமாகும். இதில் நார்சத்து வைட்டமின் சி புரதம் பொட்டாசியம் ஆன்டிஆக்சிடென்ட் பீட்டா கரோட்டின் ஆகிய சத்துக்கள் அதிகமாக காணப்படுகின்றன. மலச்சிக்கல் வயிற்றுப்போக்கு நீர்க்கடுப்பு நீரிழிவு நோய் வாயு தொல்லை ஆகியவற்றை சரி செய்ய இந்த பழம் ஒரு சரியான தீர்வாகவே இருக்கிறது.
ஆனால் ஒரு சில நோய் இருந்தால் இந்த கொய்யாப்பழத்தை சாப்பிடக்கூடாது. சிறுநீரக பாதிப்பு, சிறுநீரகத்தில் கல் ஆகிய பிரச்சனைகள் உங்களுக்கு இருந்தாலோ அல்லது சரும பிரச்சனைகள் உங்களுக்கு இருந்தாலும் கொய்யாப்பழத்தை சாப்பிடுவதை நீங்கள் தவிர்க்க வேண்டும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.
சிறுநீரக பாதிப்பு உள்ளவர்கள் ரத்தத்தில் உள்ள பொட்டாசியம் மற்றும் பாஸ்பரஸ் அளவை கட்டுப்படுத்த வேண்டும். ஆனால் கொய்யா பழத்தை சாப்பிடுவதன் மூலம் பொட்டாசியம் மற்றும் பாஸ்பரஸின் அளவு அதிகமாக இருந்துவிடும். ஆகையால் தான் இதை சாப்பிடக்கூடாது என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.




