நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடர் ஜனவரி 11 ஆம் தேதி முதல் நடைபெறுகிறது. இதில் இந்திய அணி விளையாட உள்ளது. பிசிசிஐ இன்று (ஜனவரி 3) அறிவித்த 15 பேர் கொண்ட அணியில் ஷ்ரேயாஸ் ஐயர் துணைக் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இருப்பினும், அவரது உடல் தகுதியைப் பொறுத்தே அவர் விளையாடுவார் என பிசிசிஐ தெரிவித்துள்ளது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசிப் போட்டியில் பீல்டிங்கின் போது வயிற்றுப் பகுதியில் அடிபட்டதால் அவருக்கு மண்ணீரலில் ரத்தக் கசிவு ஏற்பட்டது.




