ஆண்கள் இஞ்சி சாறை பருகினால் எந்த நோய் வராது தெரியுமா..??

Oplus_131072

பொதுவாக இஞ்சியில் ஏராளமான மருத்துவ குணங்கள் உள்ளது. உதாரணமாக இஞ்சி சாறு பருகி வந்தால் செரிமான பிரச்சனை நீங்கி நல்ல பசியை ஏற்படுத்தும்.
மேலும் வயிற்றுப் போக்கு, நெஞ்செரிச்சல் போன்ற பிரச்சனைகளில் இருந்து நிவாரணம் தரும்.இது போல இஞ்சியின் மற்ற நன்மைகள் குறித்து இந்த பதிவில் நாம் காணலாம்

1.சிறுநீரகப் பாதை சம்பந்தமான தொற்றுநோய்களை குணப்படுத்த இஞ்சியை உபயோகிக்கலாம்
2. மூட்டு வலிக்கு இஞ்சி சிறந்த மருந்து என நவீன மருத்துவமே ஒப்புக் கொண்டிருக்கிறது.
3.வாந்தியை சமாளிக்கும் ஆற்றலையும் தரவல்லது இஞ்சி..
4.பக்க விளைவுகள் இல்லாத வாந்தி தடுப்பு மருந்தாக இஞ்சியை பயன்படுத்தலாம். இஞ்சி மசக்கை வாந்தியையும் தவிர்க்கும் அருமருந்தாக பயன்படுகிறது.
5.இஞ்சியில் உள்ள காரத்தன்மை புற்றுநோய் செல்களின் வளர்ச்சியை அழித்து புற்றுநோய் வரவிடாமல் பாதுகாக்கிறது.
6.ஆண்கள் இஞ்சி சாறை பருகினால் புரோஸ்டேட் என்ற புற்றுநோய் வராது.
7.இஞ்சியில் உள்ள ஃபீனால் மற்றும் ப்ளேவோனாய்டுகள் நரம்பு மண்டலத்தை பாதுகாக்கும்.
8.இஞ்சி மூளைக்கு புரோட்டின் அளவை அதிகரிக்கச் செய்து மூளையின் ஆரோக்கியத்தை பாதுகாக்கும். இதனால் மூளை சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் வருவது தடுக்கப்படுகிறது.
9.இஞ்சிச் சாறு ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்துவதாக ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளது.
10.சர்க்கரை நோய் உள்ளவர்கள் ஒரு டம்ளர் இஞ்சி சாறு பருகி வந்தால் நீரிழிவை கட்டுப்பாட்டுடன் வைத்துக் கொள்ளலாம்.

Read Previous

தினசரி சிறிதளவு திராட்சைப் பழத்தை சாப்பிட்டு வர என்ன நன்மை தெரியுமா..??

Read Next

கல்லீரலில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற உதவும் வெண்டைக்காய்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular