எலிக்கு நீரில் நீந்துவது மிகவும் பிடிக்கும்.
இரண்டு மூன்று நாட்கள் கூட தண்ணீரில் மிதந்து நீந்திக் கொண்டு இருக்க முடியும்.
எனவே ஒரு எலியை தண்ணீரில் தூக்கி எறிந்தால் அது நீந்தியே ஓடிவிடும்.
எலிகள் டாய்லெட் மூலம் நீந்தி வீட்டில் நுழைந்து விடும். அதே வழியில் ஓடியும் போய்விடும்.
எலிகள் அதிக ஞாபக சக்தி உள்ளவை. மனித முகங்களை நன்றாக நினைவில் வைத்துக் கொள்ளுமாம்.
எலியை செல்லப்பிராணியாக வளர்ப்பவர்கள் பெயர் வைத்து அழைத்தால் அறிந்து கொண்டு விடும்.
எலி அதன் வழியை மறக்வே மறக்காது.
எலியின் வால் அதன் உடல் வெப்பத்தை சீராக வைக்கும். அதன் உடலை பேலன்ஸ் செய்ய உதவும். மேலே ஏறவும் உதவும்.
ஒரு எலி நோய்வாய்ப்பட்டால் மற்ற எலிகள் அதை நன்றாக கவனித்து நலமாக்க செய்யுங்கள்.
எலி தன் உடலை நன்றாக சுத்தம் செய்து வைத்துக் கொள்ளும். பூனை நாயைவிட அதிக சுத்தம்.
எலி தன் உடலில் நான்கு பங்கு சிறிய ஓட்டைக்குள் உடலை சுருக்கிக் கொண்டு புகுந்து விடும்.




