இறைவனிடம் குறைகளை முறையிடுவதை தவிர்த்து, முழு நம்பிக்கையுடனும் நேர்மறை எண்ணங்களுடனும் வழிபடுவதே வேண்டுதல்கள் நிறைவேற சிறந்த வழியாகும். கோயிலுக்கு சென்றதும் மனதை அமைதிப்படுத்தி, கிடைத்த நன்மைகளுக்கு நன்றி கூறி, “நல்லதே நடக்கட்டும்” என்ற சரணாகதி உணர்வோடு வேண்டுவது அவசியம். இத்தகைய மனமாற்றமே எதிர்மறை ஆற்றல்களை நீக்கி, இறைவனின் அருளை பெற்று தரும் என ஆன்மிக பெரியோர்கள் கூறுகின்றனர்.




